17965 அச்சுவேலி பெருநகர்.

இளையதம்பி சிவயோகநாதன். மொறட்டுவை: இ.சிவயோகநாதன், B30/3/2/, சொய்சாபுர தொடர்மாடி, 1வது பதிப்பு, மே 2013. (கொழும்பு 6: R.S.T.Enterprises Pvt Ltd, 114, W.A. சில்வா மாவத்தை).

61 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14  சமீ.

இந்நூல் முகவுரை, பொது விளக்கம், லங்கா மாதா மடம், அச்சுவேலி தென்னிந்திய திருச்சபை, வளலாய் பிள்ளையார், அச்சுவேலி சுதேச மருந்து உற்பத்தி நிலையம், ச.தம்பிமுத்துப்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி பாவலர் தம்பிமுத்து, பொயற்றி (லண்டன்), இரண்டாவது லண்டன் வாரிசு, சமய நோக்கு, அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள், சைவ வித்தியாசாலை தாபித்தல், வடநாட்டு யாத்திரை, சைவக்கிரியைகளை செய்துவைத்தல், ஸ்ரீலஸ்ரீ குமாரசுவாமிக் குருக்கள் வெளியிட்ட நூல்கள், சுவாமிநாதர் இளையதம்பி, சேர். சிற்றம்பலம் ஏ.கார்டினர், வீ.வாமதேவன் ஆகிய 20 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர் இளையதம்பி சிவயோகநாதன் ஒரு விஞ்ஞான பட்டதாரியாவார். ஒரு அரச கூட்டத்தாபனத்தின் ஓய்வுபெற்ற பிரதி பொது முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23356).

ஏனைய பதிவுகள்

15923 உலகம் முழுவதும் தமிழ் முழங்கிய தவத்திரு தனிநாயகம் அடிகளாருக்கு அறிஞர்களின் கருத்தோவியங்கள்.

அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, ஏ.டபிள்யூ. அரியநாயகம் (இணைஆசிரியர்கள்). கல்முனை: அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கல்முனை: கோல்டன் ஓப்செட் பிரின்டர்ஸ்). 171 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ.,