17970 காலம் அரித்திடாத மூலம் காத்திடுவோம்.

ஜொனியன்ஸ் கூட்டமைப்பு. பிரான்ஸ்: Federation Johnions, 20 Avenue Des Acacias, 93600, Aulny-Sous-Bois, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

250 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13  சமீ.

எங்களின் அடையாளமே எங்கள் ஊராகும், யா/ஏழாலை தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை-விளிசிட்டி, சூராவத்தை அம்மன் கோயில் வரலாறு, புனித திரேசம்மாள் ஆலய வரலாறு, யாஃஏழாலை தெற்கு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் வரலாறு, சூராவத்தை புனித திரேசம்மாள் ஆலய பங்கின் ஆரம்ப உறவுகளை மீண்டும் நினைவில் கொள்வோம், அம்மன் கோயில் விரிவாக்கப் பணியில் எமது மூத்தோர்கள், சுன்னாகம் அனல் மின் நிலைய கழிவு எண்ணெய் கசிவுகளும்  எங்கள் மக்களின் எதிர்காலமும், சூராவத்தை ஊரியாட்டி விளிசிட்டி நாக்கியம்புலம் மயிலங்காடு உள்ளடங்கிய சிற்றூரில் பலதுறைகளில் அன்றும் இன்றும் பல்வேறுபட்ட தகைமைகளைக் கொண்டிருந்தவர்கள் (பெயர்ப் பட்டியல்), சுப்பிரமணியம் சின்னத்தம்பி, விளிசிட்டி சிற்றம்பலம் வைத்தியர், திரு. ஐயம்பிள்ளை நாகமுத்து, முருகர் கந்தர் சிவகுரு (கிராம சேவையாளர்), பண்டிதர் யோன்பிள்ளை, அன்னம்மா ஆரோக்கியம், சிவலிங்கம் கஜமுகலிங்கம், சின்னத்தம்பி கந்தையா, சைமன் ஜோசப்  தம்பாப்பிள்ளை, பேணாட் சூசைப்பிள்ளை, தியாகராசா அருளானந்தம், கனகசபை சபாநந்தன், பொன்னுச்சாமி கந்தசாமி, ஞானமணி ஞானப்பிரகாசம் தோமஸ், காலத்தால் மறையாத மணியம் கடை-வரலாற்றுப் பதிவு, சூரைப்பதியில் என் வாழ்வும் சமூக எண்ணங்களின் பங்களிப்பும், கலாநிதி சனசமூக நிலையம், தமிழ்ப் பொதுப்பணி மன்ற சனசமூக நிலையம், பாரதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், ஜொனியன்ஸ் என்னும் கரு உருவாகி வளர்ந்து உருப்பெருத்த காலங்கள், ஜொனியன்ஸ் கழகம், 1976ஆம் ஆண்டு ஜொனியன்ஸ் சிறுவர் பள்ளி, ஜொனியன்ஸ் கூட்டமைப்பினர் முன்னெடுத்த நற்பணிகள், எமக்குத் தலைசிறந்த வழிகாட்டியாக வாழ்ந்த ஆசையப்பா ஆசிரியர் – அருளானந்தம் தியாகராஜா ஆகிய தலைப்புகளின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள சூராவத்தை, ஊரியாட்டி, விளிசிட்டி, நாக்கியம்புலம், மயிலங்காடு ஆகிய கிராமங்களை உள்ளடங்கிய சிற்றூர் பற்றிய பிரதேச வரலாற்றுப் பதிவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்