17973 திஸ்ஸமகாராம மரபுரிமைகளைப் பார்வையிடுவோம்.

சுமித் ரணசிங் க (சிங்கள மூலம்), ஜனரஞ்சனி தனபாலன் (தமிழாக்கம்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, மத்திய கலாசார நிதியம், உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய கொழும்பு கலாசார நிதிய அச்சகம், 11, சுதந்திர அவென்யு).

viii, 41 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-613-379-0.

இலங்கையின் கலாசாரம் மற்றும் தொல்பொருளியல் ரீதியான மரபுரிமைகளை எடுத்துக்கூறும் இடங்கள் தொடர்பான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் தொடர் எழுதப்பட்டுள்ளது. திஸ்ஸமகாராம அமைவிடமும் புவித் தரையமைப்பும் பற்றிய விளக்கத்தைத் தொடர்ந்து,  இம்மாவட்டத்தின் மரபுரிமைச் சின்னங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை இந்நூல் வழங்குகின்றது. திஸ்ஸ மகாசேய விகாரை, சந்தகிரிய தூபி, சந்தகிரிய போதிவிருட்ச மாடம், சந்தகிரிய புத்தர் சிலையும் சிலைக்கூடமும், சந்தகிரிய பௌர்ணமி இல்லம், ஜந்தாகரய அல்லது கினிஹல்கெய எனப்படும் சுடுநீர்க் குளியலறை, சிலாபஸ்ஸய பிரிவெனா, அக்குருகொட கற்றூண் சாசனம், தஞ்சாநகர் பிள்ளையார் கோயில், யட்டாலய விகாரை, மெனிக் விகாரை, நெதிகம்வில வில்பிட்ட ரஜமகா விகாரை, யோதகண்டிய நாகமகா விகாரை, கிரிந்த லங்கா விகாரை, உத்தகந்தர விகாரை, யோத வாவி, திஸ்ஸ வாவி ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி அறிவிற்கான புத்தகம் என்ற தொடரில் இது வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71586).

ஏனைய பதிவுகள்

Wonderful Lion Local casino Incentives

Posts Bonuses and you can Promotions Provided by Wonderful Lion Gambling establishment Player’s Payment Are Put off Because of the Zodiac Gambling establishment Lounge777 User

11196 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம்: யுத்த காண்டம் சூரபதுமன் வதைப்படலம் (மூலமும்உரையும்).

கச்சியப்ப சுவாமிகள் (மூலம்), ச.சுப்பிரமணியம் (உரையாசிரியர்), ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அஷ்டலட்சுமி பதிப்பகம், 41, கண்டி வீதி, கைதடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (கொழம்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம்,  320 செட்டியார்

13393 வணிகஜோதி: 13ஆவது மலர்.

கே.ஏ.முரளி, எஸ்.சசிகலா, கே.சுமந்திரன், எஸ்.சரோஜினிதேவி (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: வர்த்தக மாணவர் மன்றம், யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி). (20), 96 பக்கம்,