முல்லை பொன். புத்திசிகாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
148 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-09-6.
முல்லை மண்ணுக்கு அழகைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நந்திக் கடல் பற்றி பல்வேறுபட்ட தகவல்களை மிகச் சுவைபட தன் வாழ்நாள் அனுபவங்களின் துணையுடன் இந்நூலின் வாயிலாக முல்லை பொன். புத்திசிகாமணி வெளிப்படுத்தியுள்ளார். நந்திக் கடல் பல மக்களின் வாழ்க்கைக்கு ஆதார சுருதியாக விளங்குவதை இந்நூலைப் படிக்கின்றவர்கள் அறிந்துகொள்வார்கள். ஒரு சமூக வரலாற்றைப் பதிவுசெய்யும் நூலாக இது அமைகின்றது. சொர்ணம்மா, சின்னாச்சி மாமி ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் ஆசிரியரின் மூன்றாவது நூல் இதுவாகும். 24 அத்தியாயங்களில் நந்திக்கடல் பற்றிய சமூக வரலாற்று விவரணையாக இதனை ஆசிரியர் சுய அனுபவக் குறிப்புகளுடன் சுவையாகவும் இயல்பாகவும் எழுதியிருக்கிறார். இறுதியில் ‘நந்திக் கடல்’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதிய சிறுகதையொன்றும் இடம்பெற்றுள்ளது. ஜீவநதி வெளியீட்டகத்தின் 379ஆவது நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.