17991 பூகம்பம்: பலஸ்தீன முஜாஹித் அய்யாஷின் போராட்ட வரலாறு.

எம்.ஆஸிம் அலவி. கொழும்பு 9: ஸ்ரீலங்கா-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம், 146 வேலுவான வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1997. (பேருவளை: A.A.Prints, 30, First Floor, Super Market).

(10), 185 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISBN: 955-9547-00-3.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பலஸ்தீனில் உதயமான மாவீரர்களுள் யஹ்யா அய்யாஷ் குறிப்பிடத்தகுந்தவர். அவரது மறைவின் ஓராண்டு நிறைவிலேயே இந்நாவல் வெளிவருகின்றது. முழு உலகினதும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இஸ்ரேலை தனிமனிதனாக நின்று கதிகலங்க வைத்த அய்யாஷ் வெறுமனே ஒரு போராட்ட வீரரல்ல.  அவர் ஓர் இஸ்லாமிய இயக்கவாதியும் கூட. இந்நாவலில் அவரது இயக்க ஈடுபாடு மிக அழகாக விளக்கப்படுகின்றது. அய்யாஷினது வரலாறு அனைத்து இளைஞர்கள்-மாணவர்களால் படிக்கப்படவேண்டிய ஒரு சிறந்த இலக்கியமாகும். அவரது தீரம், துணிவு அர்ப்பணிப்பு, இலட்சிய வேட்கை, தனது சொந்த விவகாரங்களால் போராட்ட வாழ்க்கையிலிருந்து திசை திருப்பப்படாமை, எந்நேரமும் தனது மரணத்தை எதிர்பார்த்திருத்தல், ஏனையோரைப் பயிற்றுவிக்கும் பாங்கு, மற்றும் இன்னோரன்ன அரிய பண்புகள் அய்யாஷின் வாழ்க்கையிலிருந்து கற்கவேண்டியவையாகும். நாவல் வடிவிலான இவ்வாழ்க்கை வரலாறு மொஷே ஸஹாலின் மனநிறைவு, துணிகர வேங்கை ஈன்றெடுக்கப்பட்டது, பசியாறும் நரி, எஞ்ஜினியர் வருகிறார், அநியாயக் காரனுக்கு தனியான பூகம்பம், தேடுதல் வேட்டை, இஸ்ரேலுக்கு நிம்மதி தேவை, குரல் ஓய்ந்தாலும் அலை ஓய்வதில்லை ஆகிய அத்தியாயங்களினூடாக விறுவிறுப்பாக நகர்த்தப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

Casinochan Canada

Content Chan Mobile On line casino Casinochan Online casino Evaluate 2021 Casinochan Support service Might be Casinochan Legitimate? The quick the velocity these mmorpgs helps