13035 இந்திய அறிவாராய்ச்சியியல்.

நா.ஞானகுமாரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park).

xiv, 202 பக்கம், தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-051-2.

எட்டு இயல்களைக்கொண்ட இந்நூலின் முதலாம் இயலில் அறிவாராய்ச்சியியலுக்கோர் அறிமுகம், அறிமுகம், மேலைத்தேய அறிவாராய்ச்சியியல், இந்திய அறிவாராய்ச்சியியல், இந்திய அறிவாராய்ச்சியியலில் பிரமாணங்கள் ஆகிய தலைப்புகளிலும், இரண்டாம் இயலில் காட்சிப் பிரமாணம், அறிமுகம், வேதாந்தத்தில் காட்சி, நியாய தரிசனத்தில் காட்சி,  சைவசித்தாந்தத்தில் காட்சி,  வாயிற் காட்சி,  மானதக் காட்சி,  தன்வேதனைக் காட்சி,  யோகக் காட்சி,  காட்சிப் போலிகள் ஆகிய தலைப்புகளிலும், மூன்றாம் இயலில், அனுமானப் பிரமாணம், நியாய தரிசனத்தில் அனுமானம், பௌத்தத்தில் அனுமானம், சைவசித்தாந்தத்தில் அனுமானம், அனுமானப் போலிகள் ஆகிய தலைப்புகளிலும், தொடரும் இயல்களில் முறையே ஆகமப் பிரமாணம், ஒப்புவமைப் பிரமாணம், அர்த்தாப்பத்திப் பிரமாணம், அனுப்பலத்திப் பிரமாணம் ஆகிய தலைப்புகளிலும், இறுதியான எட்டாம் அத்தியாயத்தில் ஏனைய பிரமாணங்களும் விளக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையில் 34 வருடங்களாகக் கடமையாற்றுபவர். பன்னூலாசிரியரான இவர் மெய்யியல், சைவ சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62148).

ஏனைய பதிவுகள்

Betadonis Factors Game Erfahrung

Blogs Check that: Samurai Sushi Webpages Archive, Betadonis Points Mrbet Gambling establishment Game Erfahrung BetAdonis is actually an in-range gaming site giving plenty of away