கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
xviii, 166 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7973-04-3.
திருமனிதர் வாழ்வு என்ற தொடர் ஞாயிறு தினக்குரலில் கோகிலா மகேந்திரன் அவர்களால் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையைக் கொடுப்பதாகவும் வழிகாட்டியாக அமைவதாகவும் இக்கட்டுரைகள் காணப்பட்டன. திருக்குறள், நாலடியார், சங்க இலக்கியங்கள் முதலான தமிழ் நூல்களிலிருந்து மட்டுமன்றி, மேலைத்தேய தத்துவஞானிகளின் மேற்கோள்களையும் ஆங்காங்கே தந்து திருமனிதர்களான உதாரண புருஷர்களையும் காட்டியிருப்பது வாசகர்களை இலகுவில் திருமனிதர்களாக மாறவைப்பதற்கான வழியென்றும் கருதலாம். இந்நூலில் அமுத மழை, எளிமையே இனிமை, நீட்டும் கரங்கள், தன்னைத்தான் காதலர், புகழ், நெஞ்சோடு சொல்வது, வாசிப்பு, நிகழும் கணத்தில் வாழ்தல், திறந்த மனம், அன்பு, நல்விருந்து, இசையில் வசமாதல், பண்புடையாளர் தொடர்பு, வகைகூறல், பாதுகாப்புக் கவசம், முன்வைப்பு, இலக்கு நோக்கிய பயணம், வாழ்வெனும் பரீட்சை, குடும்பமெனும் கோயில், சொந்தக்கால், விமர்சனம் தெளிதல், துன்பம் வெல்லுதல், மறுபக்கம், அஞ்சாமை, தொடர்பாடல், நேரமுகாமை, முழுமை அறிதல், தலைமை ஏற்றல், கேட்டுப் பெறுதல், நெஞ்சுக்கு நேர்மை, சக்தி தீய்தல் தவிர், நித்திராதேவி, பதற்றம் மறைதல், சினமெனும் கொல்லி, சுயமுரண் தீர்வு, செல்வப் பிரக்ஞை, நடத்தை மாற்றம், உறுதியான வெளிப்பாடு, உணவுப் பழக்கம், நீண்ட வாழ்வு, தளர்வாய் இருத்தல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 41 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.