செல்வத்துரை குருபாதம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், இல. 48 B, புளுமெண்டால் வீதி).
xx, 272 பக்கம், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 700., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-9396-90-1.
மெய்யியல்துறை வழியில் வாழ்வியல் பற்றிய விரிவான புரிதலைத் தோற்றுவிக்கும் நூல் இது. நான் யார்? வாழ்க்கை என்பது ஒத்திகை இல்லை, வாழ்வைப் புரிதல், ஆனந்தம் உங்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறது, தனித்திருத்தல்-தனிமையிலிருத்தல், உண்மையற்றதில் உண்மையாக இருங்கள்-உண்மையானதில் உண்மையற்றவராக இருக்காதீர்கள், மாறக்கூடியது அது மாறும்-மாறமுடியாதது அது மாறாது-அவைகளை ஏற்றுக்கொள்வோம், உயர் வாழ்க்கையைப் போதிக்கும் இயற்கை, மகிழும் கூட்டுக் குடும்பம் – மியர்கற்;, ஜனநாயகப் பறவைகள், நம் வாழ்க்கையை நாம் உருவாக்கவேண்டும், எண்ணம் போல மனிதன், ஒவ்வொரு கணமும் புத்தம்புதிதாய் இருக்கவேண்டும் இளமையாய் இருப்பீர்கள், எல்லாம் பூரண சரியாக இருக்கவேண்டும் என்பது தீமையானது, மனம் மனிதனது சுதந்திரம், அகிலத்தின் அவலங்கள், உலக மகிழ்ச்சியை நோக்கி, நோயைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது மனம், கவலைப்படுவதை ஒரு பழக்கமாக மாற்றாதீர்கள், நமபிக்கை இழக்கும்வேளை மூழ்கத் தொடங்குகிறீர்கள், உங்களின் உண்மையான முகத்தைக் கண்டுபிடியுங்கள், அலைபாயும் மனமே நீ சும்மாயிரு, நீண்டகால வாழ்வின் இரகசியம், வாழ்க்கையின் அற்புதமான பரிசே முதுமை, ஆற்றல் கோபத்திலும் பாலுறவிலும் மறைகிறது, சமத்துவம் வழங்கும் கனவுகள், விழிப்புணர்வுடன் வாழுங்கள், இருங்கள் ஆனால் அதனுடையதாக இருக்காதீர்கள், நீங்களே உங்கள் போட்டியாளர், நீங்கள் தவறு செய்யும்போது உங்களை நீங்களே கையும் மெய்யுமாகப் பிடியுங்கள், ஆழ் நம்பிக்கைகளும் செயற்பாடுகளும், மனம் சார்ந்த விழிப்புணர்வு உடல்சார்ந்த விழிப்புணர்வு, மதம் சார்ந்த மனம், துணிச்சலும் வீரமும் நிறைந்ததே மன்னித்தல், நீங்கள் ஒரு பிச்சைக்காரனா? மனிதன் பல குரல்களின் கூட்டம், அறிவு-உணர்வு-செயல், இன்பமாக வாழ்வது எப்படி? அன்புவழி, புதிய புதுவாழ்வு வாழ்வோம்-வாழ்க்கை ஒரு கொண்டாட்டமே ஆகிய 40 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வத்துரை குருபாதம், குடும்பத்தினருடன் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். (இல.180, Bonspiel Drive, Toronto M1E 5K4, Ontario). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62616).