மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, 81, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(16), 312 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவுத் திருக்கோவில் முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 2016, ஒக்டோபர் 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மனவளக்கலையினை அறிமுகம் செய்து வரும் மனவளக்கலை மன்றம் யாழ் பிறவுன் வீதியில் இந்தக் கோவிலைத் திறந்து வைத்திருக்கின்றது. திறப்பு விழா வைபவத்தில், தமிழகத்தில் இருந்து பெருமளவான அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டனர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்கே.எம்.மயிலாநந்தம் தலைமையில் மனவளக்கலை அறிஞர்கள் வருகை தந்திருந்ததுடன், சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இவ்வைபவத்தையொட்டி வெளியிடப்பட்ட மலர் இதுவாகும். மனநலமேம்பாடு, மனவளக்கலை யோகா பயிற்சிகள், மனமும் மனிதநேயமும் போன்ற விடயங்களில் பல படைப்புக்களை இம்மலர் தாங்கி வெளிவந்துள்ளது.