புலேந்திரன் நேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 120 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-613-7.
மெய்யியலின் ஒருபிரிவாகக் காணப்படும் உளவியலையும் அதன் பகுதியாகக் காணப்படும் உளவளத்துணையை பௌத்த மதத்துடன் தொடர்பு படுத்தியும் இந்நூல் வெளிப்படுத்துகின்றது. புத்தரது பிறப்பு, வாழ்வு, இல்லற, துறவற நிலைகள், பௌத்தம் கூறும் உயர்ந்த உண்மைகள் பற்றியும் இந்நூல் பேசுகின்றது. அடுத்து புத்தர் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்த தன்மையும் அவரது பிறப்பு, பரிநிர்வாணம், போதனை நடவடிக்கைகள் என அனைத்துமே இயற்கைச் சூழலிலேயே நடைபெற்ற தன்மையையும் இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. பௌத்தம், புத்தரும் இயற்கைச் சூழலும், உளவியல், பௌத்த உளவியல், பௌத்தமும் மேலைத்தேய உளவியலும், பௌத்தமும் சமூக உளவியலும், உளவளத்துணை, பௌத்த உளவியல் உளவளத்துணை, பௌத்த உளவளத்துணையாளருக்கான பண்புகள், பௌத்த உளவளத்துணையின் பிரதான வகைப்பாடுகள், பௌத்த உளவளத்துணை நுட்பங்கள், பௌத்த உளவளத்துணையில் முக்கியம்பெறும் சிகிச்சை முறைகளும் அதற்கான நுட்பப் பிரயோகங்களும், உளவளத்துணையில் பயன்படும் ஜாதகக் கதைகள், பௌத்த உளவளத்துணை மற்றும் மேலைத்தேய உளவழி மருத்துவம், தியானம், மரணம் (நிர்வாணம்), புத்த பெருமானது அறப்போதனைகள் ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார்.