13047 இலகு வென் வரைபடம்.

ஆர்.ஆர்.ஜனகன். திருக்கோணமலை: ஆர்.ஆர்.ஜனகன், இல. 19/9, விகாரை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2018. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.டிஜிட்டல்ஸ் பிரின்டர்ஸ்).

xiv, 265 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-38613-2-0.

க.பொ.த. உயர்தரம் மற்றும் மெய்யியல் பாடநெறிக்கான இந்நூல் தர்க்கவியல் (Logic) புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. வென் அறிமுகம், அறுவகை எடுப்புகளுக்கான வென் விளக்கப்படமும் அவற்றிற்கான வகுப்புக் குறியீடுகளும், விசேட எடுப்புகளுக்கான வென் விளக்கப்படமும் அவற்றிற்கான வகுப்புக் குறியீடுகளும், வென் வரைபட விளக்க சிறுகுறிப்புகள், தூய அறுதி நியாயத்தொடை வாதங்களின் வாய்ப்பினை வென் வரைபடத்தின் மூலம் சோதித்தல் ஆகிய பாடங்களுடன் போதிய பயிற்சிகளும் மாதிரி வினாத்தாளும் அதற்கான விடைகளும் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  261592cc). 

ஏனைய பதிவுகள்