இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
230 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×13.5 சமீ., ISBN: 978-955-43909-1-1.
இந்நூலில் ஆயிரத்தொரு அருள்மொழிகள் அடங்கியுள்ளன. அவை தமிழ் நெடுங்கணக்கின் அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்த பேரறிஞர்களின் நூல்களயும் அவர்கள் பற்றி நூல்களில் படித்துப் பெறப்பட்ட விடயங்களையும்ஆசிரியர் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார். அவற்றோடு சில அறிஞர்கள், அருளாளர்களின் புகைப்படங்களும் இந்நூலில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இணுவையூர் இரகுவின் இளமைக்காலத்திலிருந்து அவரால் சேகரித்துப் பதிந்து வைக்கப்பட்ட இப் பொன்மொழிகள் மற்றும் அருள்மொழிகளின் தேர்ந்த தொகுப்பே இதுவாகும். இவற்றிலிருந்து தேர்ந்த அருள்மொழிகளை காலத்திற்குக் காலம் கொழும்புத் தமிழ்ச்சங்க அறிவிப்புப் பலகையிலும், வெள்ளவத்தை ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்ய அறிவிப்புப் பலகையிலும் எழுதிக் காட்சிப்படுத்தியிருந்தார். அவ்வாறு பதிவுசெய்யப்பெற்ற அருள்மொழிகளின் தொகுப்பே இவையாகும்.