13051 ஐவகை ஒழுக்கவியற் கொள்கைகள்.

சி.டி.புறோட் (ஆங்கில மூலம்), கே.ஈ.மதியாபரணம், எஸ்.வி.குணநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ஏனெஸ்ற் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

xxxii, 240 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

C.D.Broad எழுதிய Five types of Ethical  Theory என்ற நூலின் தமிழாக்கம் இது. ஆங்கில மூல நூல், Routledge and Kegan Paul Limited நிறுவனத்தினால் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலில் ஸ்பினோசர், பட்லர், ஹியூம், கான்ற், சிட்ச்விக்  ஆகிய மெய்யியலறிஞர் ஐவரதும் ஒழுக்கவியற் கொள்கைகள் விமரிசன முறையில் எடுத்து ஆராயப்பட்டுள்ளன. இவர்கள் ஐவரும் தலைசிறந்த  சிந்தனையாளர்களான போதிலும், இவர்களுடைய கருத்துகளுக்கிடையில் அடிப்படையான வேறுபாடுகள்  உள்ளனவாதலால் அவற்றை ஆராய்வதன் மூலம்  தொல்கால ஒழுக்கக் கொள்கைகள் பற்றிப் போதிய அளவுக்கு விளங்கிக்கொள்ள முடியும். இம்மெய்யியலறிஞருடைய கருத்துக்கள்  ஒழுக்கவியற் கொள்கைகளுக்கான எடுத்துக்காட்டுகளாக மதிக்கப்படுகின்றன. இந்நூலின் முதல் 101 பக்கங்களும் கே.ஈ.மதியாபரணம் அவர்களுடைய மொழிபெயர்ப்பாகும். எஞ்சியது திரு. எஸ்.வி.குணநாயகம் அவர்கள் தமிழாக்கம் செய்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4196).

ஏனைய பதிவுகள்