நா.ஞானகுமாரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், இல.36, ஸ்ரேசன் வீதி).
v, 6-70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
பேராசிரியர் நா.ஞானகுமாரன் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2017இல் நடத்திய மூன்று நாள் தொடர் சொற்பொழிவின் எழுத்துருவாக்கம் இதுவாகும். முதலாம் நாள் சொற்பொழிவு ‘ஒழுக்கவியல் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பிலும், இரண்டாம் நாள் சொற்பொழிவு ‘மனித வாழ்வில் உரிமைகளும் கடமைகளும்’ என்ற தலைப்பிலும், மூன்றாம் நாள் சொற்பொழிவு ‘தண்டனையும் அது பற்றிய ஒழுக்கப் பார்வையும்’ என்ற தலைப்பிலும் இடம்பெற்றிருந்தன. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறையின் சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62178).