ஒளவையார். யாழ்ப்பாணம்: காந்தளகம், 212 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
16 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18.5×12.5 சமீ.
மாணவர் நலன்கருதி, யாழ்ப்பாணத்திலிருந்து காந்தளகம் பதிப்பகத்தினர் தமது அச்சகமான ஸ்ரீகாந்தா அச்சகத்தின் வாயிலாக வெளியிட்டுவந்த பெருமளவிலான சைவ சமயம் மற்றும் நீதி நெறிகளைப் போதிக்கும் சிறுநூல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். ‘அறஞ் செய விரும்பு’ முதல் ‘ஓரஞ் சொல்லேல்’ வரையிலான ஆத்திசூடி வரிகள் பொருள் விளக்கத்துடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன.