எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
viii, 96 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-97763-3-8.
களனிப் பல்கலைக்கழக மொழியியல்துறை விரிவுரையாளரான எஸ்.ஜே. யோகராசா ஒரு உளவியல் ஆலோசகருமாவார். பன்னூலாசிரியரான இவரது 27ஆவது நூல் இதுவாகும். இந்நூலில் மனித உள்ளங்களில் ஏற்படும் ஏக்கங்கள், கவலைகள், கஷ்டங்கள் என்பவற்றைப் பற்றிய அறிவியல்ரீதியான ஆய்வினை மேற்கொண்டுள்ளார். ஒருவருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் பாணியில் இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். உனது பெறுமதியை அறிந்துகொள், உன்னிலே தொடங்கு, மற்றவர்களோடு நல்ல உறவை ஏற்படுத்து, உள்ளத்தின் தாகம், வாழ்வில் உறவுமுறைகள், உனது உணர்வுகளை நீ சரியாக நிர்வகி, மனிதனும் அவனது சுபாவமும், உள விளையாட்டு, உங்களது வாழ்விலே விளையாட்டுக்கள், வாழ்க்கை அமைப்பு, உண்மையான விடுதலை, முழுமையான மனிதன் ஆகிய பன்னிரண்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44281).