13071 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அருளிய நீதிவாக்கியங்கள்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17.5 சமீ.

ஆறுமுக நாவலரின் ‘பாலபாடம்” நான்கு புத்தகங்களை மாணவப் பருவத்தினருக்கென எழுதி வெளியிட்டார். இவற்றிலே இரண்டாம் பாலபாடத்திலிருந்து ‘அகநீதி வாக்கியம்’ என்ற பெயரில் சிறப்பாக எழுதப்பட்ட 82 நீதி வாக்கியங்கள் மாணவர்கள் ஆத்மார்த்தமாக உணர்ந்து ஒழுகவேண்டிய ஒழுக்க நன்னெறி விழுமியங்களைப் போதிப்பனவாக உள்ளன. அந்த வகையில் நீதி வாக்கியங்கள் என்ற பகுதியை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வில் மீள்பதிப்புச் செய்து வெளியிட்டுள்ளனர். புலவர்கள், வித்துவான்கள் சமகாலத்தில் பயன்படுத்திவந்த வித்துவ நடையையோ, அக்காலத்தில் பாமர மக்கள் பயன்படுத்திய கொடுந்தமிழ் நடையையோ பயன்படுத்தாமல் எத்திறத்தார்க்கும் புரியும்படியான தவறுகளில்லாத புதிய நடையை நாவலர் பின்பற்றியிருந்தார். அதனை நீதி வாக்கியங்களிலும் பயன்படுத்தியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

14138 திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஷேக மலர்.

இ.வடிவேல், மு.சுந்தரலிங்க தேசிகர், வே.வரதசுந்தரம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). (12), 160