13072 அருளது நிலைத்திறன் அல்லது பரவெளித் தத்துவம் நுண்மை விளக்கம்: சிவதத்துவ-ஒளி, வெளி ஒப்பீட்டாய்வு நூல்.

நா.சிவபாதசுந்தரனார். வட்டுக்கோட்டை: தமிழ்ச் சங்கம், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம்).

(16), 36 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 23.5×19 சமீ.

மலேசியாவில், கோலாலம்பூர் நகரத்தில் இடம்பெற்ற ஆறாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் தொல்புரக்கிழார் நா.சிவபாதசுந்தரனார் அவர்களால் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. நூன்முகம், ஒளியும் வெளியும் (ஒளிவெளி பராபரம்/வெளிப்பு ஒளி-இறுபொருள், ஒளிவெளிப்பு-இறைபொருள்/வெளி ஒளி: பராபரை),வெளி: பரவெளி (வெளி இயக்கம்/வெளி இயக்க அமைவு/வெளி இயக்க வடிவம்), பரநிலைவெளி (வெளிப்பொருள்-அருவம்/வெளி ஒளிப்பொருள்- அருவுருவம்), சிவதத்துவம் தழுவும் விஞ்ஞானம் (சிவ-பொதுவிளக்கம்/சிவ-சிறப்பு விளக்கம்/பராபொருள்-சிவ, பராசத்திப் பொருள் சி:ய), நிறைவுரை ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16711).

ஏனைய பதிவுகள்

15136 முதுபெரும் புலவர் அமரர் திரு. வை.க.சிற்றம்பலம் அவர்கள் இயற்றிய பாடல்கள்.

வை.க.சிற்றம்பலம் (மூலம்), எஸ்.சிவானந்தராஜா (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை). 74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×14.5 சமீ.