13076 இறையியல் தத்துவமும் வழிபடும் முறைகளும்: பகுதி 4: உணர்வரிய மெய்ஞானம்.

சிவசிதம்பரம் திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: பழனி ஆனந்த இல்லம், சித்திரமேழி, இளவாலை, 1வது பதிப்பு, 2010. (மானிப்பாய்: சௌந்தரம் அச்சகம், சங்கரப்பிள்ளை வீதி).

xxv, 278 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ.

Principles and Practice of Theology (Tamil Medium) என்ற ஆங்கிலத் தலைப்புடனும் வெளிவந்துள்ள தொடர் நூலின் நான்காவது பாகம் இது. முதற்பாகம் 1999இலும், இரண்டாம் பாகம் 2001இலும் மூன்றாவது பாகம் 2007இலும் வெளிவந்தன. ஈழத்து நகுலேஸ்வர, வட இலங்கை வலய மேழியூர் சைவப்புலவர் சி.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய இந்நூலின் நான்காவது பாகம், நல்லார் இணக்கமும் பயன்பாடும், நூல்வந்தவழி, காரணாகமம் ஓர் அறிமுகம், வைதிக சைவத் தமிழ்ச்சங்க காரணாகம சிந்தனைகள், சைவ சித்தாந்த தரிசனம், சமய தத்துவ ஞானத்தில் வேதாகம மந்திரச் சிந்தனைகள், மனித நடத்தைகளும் சமய தத்துவ ஞானமும், சமய வாழ்வும் சமூக வாழ்வும், கோயில் வழிபாடும் அதன் பயனும், திருவாசகம்-சிவபுராணம் உணர்த்தும் உயர்வரிய மெய்ஞ்ஞானம், புலவர் தமிழ் எழுத்துக்களில் உணர்த்தும் உயர்வரிய மெய்ஞ்ஞானம், திருமந்திரம் பத்தாம் திருமுறை இலக்கியம் உயர்த்தும் உயர்வரிய சிவஞானபோதம், திருமந்திரமும் சிவஞானபோதமும், பொய்மையும் மெய்மையும் சந்தி செய்யும் களம், பசு ஆகிய ஆன்மா, திருக்கேதீஸ்வரம் சிவாலய சிவாகம களங்கள் உணர்த்தும் உணர்வரிய மெய்ஞ்ஞானம், திருக்கோணேஸ்வரம் கோயில் சிவாகம களங்கள் உணர்த்தும் உணர்வரிய மெய்ஞ்ஞானம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம்-பிரமபுரம், சைவத்தமிழ் உணர்த்தும் உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஆகிய 18 அதிகாரங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Best Web based casinos In the 2022

Blogs Would you Winnings From the Casinos on the internet? What’s the Finest On-line casino In the Pennsylvania? Must i Allege An on-line Casino Extra?