13077 உண்மை விளக்கக் கதவம் (வினா-விடை).

நடராசர் சிவபாலகணேசன். கொழும்பு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பயிற்சி மையம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(10), 62 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 21×15 சமீ.

மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூல்கள் இரண்டாகும். அவை அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் ‘உண்மை விளக்கம்’ என்பவையாகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக ‘உண்மை விளக்கம்’ எனும் இந்நூல் விளங்குகிறது. இந்நூலுக்கான உரைகளை பல்வேறு காலகட்டங்களிலும் சைவசித்தாந்திகள் வழங்கிவந்துள்ளனர். அவ்வகையில் சித்தாந்த ரத்தினம், திருமுறைநெறிச் செல்வர் ஆகிய பட்டங்களைப் பெற்ற விரிவுரையாளர் சிவபாலகணேசன் அவர்கள் கேள்வி-பதில் உருவத்தில் ஆறுமுக நாவலரைப் பின்பற்றி இந்நூலை சைவசித்தாந்த மாணவர்களின் அறிகைக்காக எழுதியுள்ளார். (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24932). 

ஏனைய பதிவுகள்

Spinanga Casino Formulere

Content Adventure palace Slot Game Review: Hvordan Bli klar over Beste Nettcasino Free Spins? Kan Man Annamme Addisjon Uten Omsetningskrav Gjennom Registrering? Hvordan Gedit Velger

14343 மலாய இலங்கையர் சங்கம் (இலங்கை) யாழ்ப்பாணம்: வெள்ளி விழா 1962.

ஆர். நாகரட்ணம் (பிரதம ஆசிரியர்), ஏ.நாகலிங்கம் (உதவி ஆசிரியர்), ஈ.சபாரத்தினம் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மலாய இலங்கையர் சங்கம், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). xxx, 112

14579 உருக்கி வார்த்த உணர்வுகள் (கவிதைகள்).

பிறேமா எழில். யாழ்ப்பாணம்: சாரல் வெளியீட்டகம், சித்தங்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvi, 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5