சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள். நயினாதீவு: சிவாகம ஞானபானு சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள், ஸ்ரீ நாகபூஷணி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
(2), 72 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
சிவாகமங்கள் திருக்கோயிற் கிரியை மரபுக்குப் பிரமாண நூல்களாகும். அவை கூறும் கிரியை மரபில் பிரதிஷ்டை முக்கியத்துவம் பெறுகின்றது. சிவாகம கிரியாபாதத்தில் கர்ஷணம், பிரதிஷ்டை, உற்சவம், பிராயச்சித்தம் பற்றிய விபரங்கள் இடம்பெறுகின்றன. திருக்கோயில் வழிபாட்டு மரபு வளம்பெற இத்தகைய கிரியைகள் பெரிதும் உதவுவன. சிவாகமக் கிரியை மரபு ஒழுங்காகப் பேணப்படுவதற்கு எமக்கு பத்ததிகள் உதவுவது போன்றே அக்கிரியைகள் நிகழ்த்தப்படுவதற்குரிய கால ஒழுங்கையும் சுபமுகூர்த்தத்தையும் அறிந்துகொள்ள பிரதிஷ்டா முகூர்த்த நிர்ணயம் என்ற நூல் உதவுகின்றது. வடமொழிக் கலப்புடனான இந்நூலில் காலமிருதம் நூலில் காணப்படும் வடமொழியுரையும் தமிழுரையும், காலப்பிரகாசிகை நூலில் உள்ள மூலமும் உரையும், காமிகாகமம் பூர்வபாகம், குமார தந்திரம் அசலஸ்தாபன விதி, முகூர்த்த சிந்தாமணி, காலவிதானம், வீமேசுர உள்ளமுடையான், சூடாமணி உள்ளமுடையான், சரசோதி மாலை, சோதிட கிரக சிந்தாமணி, ஆகம வழிபாட்டில் பாலஸ்தாபனத்தின் சிறப்பும் விலக்கப்படவேண்டிய விக்கிரகங்களும் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35606).