செ.கணேசலிங்கன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
28 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 225., அளவு: 25×19.5 சமீ., ISBN: 978-955-1997-01-4.
இந்து சமயம், கிறிஸ்தவ சமயம், இஸ்லாமிய சமயம், பௌத்த சமயம், சீக்கிய சமயம், யூத சமயம், சமண சமயம், சோரஸ்டியனிசம், கன்பூசியசிம், தாவோசியம், சின்டோ சமயம் ஆகிய உலக சமயங்கள் பற்றிய அறிமுக விளக்கங்களை சிறுவர்களுக்கேற்ற வகையில் இந்நூல் வழங்குகின்றது. செ.கணேசலிங்கன் அவர்கள் மாதவன் என்ற புனைபெயரில் முன்னதாக 1999இல் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 56 பக்க நூலின் (நூல்தேட்டம் பதிவு 3380) திருத்திய சுருக்கப் பதிப்பாக இச்சிறுவர் நூல் அமைகின்றது. இந்நூல் 002ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.