13083 அழைப்பை நோக்கி: 1 பேதுரு நிருபத்திற்கான விளக்கவுரை.

எம்.மார்க் அல்ரோய் (இயற்பெயர்: மார்க் அல்ரோய் மஸ்கிறேஞ்ஞ Mark Alroy Mascrenghe). கொழும்பு: தோமஸ் மில்டன் பதிப்பகம், 29/8, மருதானை வீதி, ஹெந்தளை, வத்தளை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (வத்தளை: கிறேஸ் கிராப்பிக்ஸ், தோமஸ் மில்டன் பதிப்பகம், 29/8, மருதானை வீதி, ஹெந்தளை).

xvi, 286 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7772-02-8

சர்வதேச தமிழ் புதிய ஏற்பாட்டு விளக்கவுரைகள் அடங்கிய இந்நூல் தமிழில் வெளிவந்துள்ள வேதபூர்வமான (evangelical) தொரு நூல். வேத மாணவர்களும் சாதாரண விசுவாசிகளும் வாசித்துப் பயன்பெறக்கூடிய விதத்தில் எழுதப்பட்டுள்ளது. 1 பெதுருவை வியாக்கியானம் செய்து இயேசுவை நம்முடைய மாதிரியாக வைக்கவேண்டும் என்று கூறுகிறார். மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் சத்தியத்தை விவரித்திருக்கிறார். மற்ற வேதபாகங்களையும் வேதாகமத்தில் இருக்கும் பிறரின் அனுபவங்களையும் பயன்படுத்தி நம் நம்பிக்கையை திடப்படுத்துகிறார். இது காலத்திற்கு ஏற்றதாகவும் போராட்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு கடந்து செல்லவும் உதவுகின்றது. சர்வதேச தமிழ் புதிய ஏற்பாட்டு விளக்கவுரைகள் என்ற தொடரில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வேதாகம மேற்கோள்கள் அனைத்தும் இந்திய வேதாகம சங்கத்தினால் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமத்திலிருந்து (பழைய மொழிபெயர்ப்பு) எடுக்கப்பட்டிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63617).

ஏனைய பதிவுகள்