அன்ரன் மத்தாயஸ். யாழ்ப்பாணம்: கிறிஸ்தவ நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
இறை அரசு என்றால் என்ன என்பதை இந்நூல் சுருக்கமாக விளக்குகின்றது. பழைய ஏற்பாட்டில் (எகிப்திய விடுதலை, படைப்பினூடே விடுதலை, மக்களின் நம்பிக்கை), கிறிஸ்துவும் இறையரசும் (போதனையில், புதுமையில், வாழ்க்கை முறையில்), இறையரசின் விழுமியங்கள் (சுதந்திரம், அன்புறவு, நீதி), இறையரசும் திருச்சபையும் (திருச்சபையின் பணி, எல்லா ஏழையர்க்கும் விடுதலை வாழ்வு) ஆகிய நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அருள்திரு அன்ரன் மத்தாயஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ நாகரிகத்துறை விரிவுரையாளராவார்.