சி.அப்புத்துரை. தெல்லிப்பழை: தெல்லிப்பழை கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாஹிபு வீதி).
xvi, 106 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 19×12.5 சமீ.
மயிலங்கூடலூர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சென்னைச் சித்தாந்த மகாசமாசத்தின் ‘சைவப்புலவர்’ பட்டமும் பெற்றவர். ஆசிரியராயிருந்து முதலாந்தர அதிபராகப் பணிபுரிந்து மயிலிட்டி (பேய்க் கோயில் பள்ளிக்கூடம் எனப்படும்) அ.மி.பாடசாலையை வளர்த்து மயிலிட்டி வடக்கு கலைமகள் மகாவித்தியாலயமாகப் பாரிய வளர்ச்சி காண வைத்தவர். பழந்தமிழ் நூல் பயற்சியுடன், நவீன இலக்கிய கவிதைத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். ‘இலக்கணசந்திரிகை’, ‘வினைப்பகுபத விளக்கம்’ முதலான இலக்கண நூல்களை பதிப்பித்தவர். பாரதி என்ற சஞ்சிகை, மழலைச் செல்வம் (1963) முதலான பல நூல்களையும் பதிப்பாசிரியராகவிருந்து பதிப்பித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவமுடைய வலி வடக்கின் ‘காங்கேசன் கல்வி மலரின்’ கௌரவ ஆசிரியர்களில் முதன்மையானவர் . மாவை முருகன் மீது இதுவரை காலமும் எழுந்த இலக்கியங்களை அறிமுகம் செய்யும் வரலாற்று ஆவணமான ‘மாவைக் கவிப்பூங்கொத்து’ என்ற நூலைத் தன் தாயாரின் நினைவாக வெளியிட்ட பெருமைக்குரியவர். உலகளாவிய பல சஞ்சிகைகளில் சமய, தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் இவர் அமுதமொழிகளை உள்ளடக்கிய இந்நூலை தனது துணைவியாரின் தமக்கையின் கணவராகிய அம்பலவாணர் சுவாமிநாதன் அவர்களுக்குச் சமர்ப்பித்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236616).