13093 அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்.

எம்.எஸ். ஸ்ரீதயாளன். தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, பெப்ரவரி 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(16), 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15.5 சமீ.

அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-பாகம் 2.

சின்னத்தம்பி ஸ்ரீதயாளன். கொழும்பு 6: காயத்திரி பப்ளிகேஷன், இல. 79/2,W.A. சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(18), 104 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5 x 15 சமீ.

சமய, சமூக ஒழுக்க நியதிகள், விழுமியங்களைக் கொண்ட தமிழர் பண்பாட்டில், பாரம்பரியம், மரபு,  நம்பிக்கை, நடைமுறைகள் என்பன மக்களை வழிநடத்துவனவாக உள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் கடைப்பிடிப்பதற்கும் சம்பிரதாயங்கள் எமக்கு உதவுகின்றன. நவீனமயமான மேலைத்தேய நடைமுறைகளின் வருகைகளால் சம்பிரதாயங்கள் மறக்கப்படுகின்றன. இந்நிலையில் நூலாசிரியர், இந்துமத சம்பிரதாயங்கள் ஏன் நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டன என்றும், அவை எம்மால் எதற்காகப் பின்பற்றப்படுகின்றன என்றும் எண்பது கட்டுரைகள் வழியாக விளக்கியிருக்கிறார். இந்நூலின் இரண்டாம் பாகம் முன்னைய 2009 பதிப்பாக வெளிவந்த மூல நூலின் 2வது பதிப்பாக இருக்கவேண்டும். இரண்டு பாகங்களிலும் ஒரே விடயமே காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46999, 62709).

ஏனைய பதிவுகள்