கவிஞர் அகில் (இயற்பெயர்: சாம்பசிவம் அகிலேஸ்வரன்). சென்னை 600 017: திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (சென்னை 600002: உதயம் ஓப்செட்ஸ்).
86 பக்கம், விலை: இந்திய ரூபா 25., அளவு: 18×12.5 சமீ.
இந்து சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் வழிமுறைகளும் பரந்த சமுத்திரம் போன்றது. அதன் தத்துவங்கள் இமயம் போன்று உயர்வானவை. இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக அனேக சமய சம்பிரதாயங்கள் இணையும் சங்கமமாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் அகில், மறைபொருளாகத் தோற்றமளிக்கும் இந்துமதத்தின் சில தத்துவங்களுக்கு ஒளிபாய்ச்சி அவற்றை எமக்கு எளிமையாக விளக்கியிருக்கிறார். சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு என பல தளங்களில் இயங்கிவரும் அகில் www.tamilauthors.com என்ற இணையத்தளத்தையும் நடத்திவருகிறார். இந்த இணையத்தளத்தின் மூலம் உலக தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் பணியைச் செய்துவருகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37135).