திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: றூபன் பிறின்ரேர்ஸ், ஆனைக்கோட்டை).
(2), 101 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 180., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-44445-6-0.
எளிய தமிழ்நடையில் இலகுவில் விளங்கக்கூடிய முறையில் நாகவழிபாடு பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூலில் ஆசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார். நாகதுவீபம் என்ற வரலாற்றுப் பெருமைகொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள நாகவழிபாட்டு மரபுகளுக்குரிய ஆலயங்களையும் தேர்வுசெய்து அவ்வாலயங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள நாக மரபுகளை வெளிக்கொணர்ந்துள்ளார். நாகவழிபாடு, ஈழத்தில் நாக வழிபாடு, பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயம், புளியங்குளம் புதூர் நாகதம்பிரான், நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆகிய தலைப்புகளில் நாக மரபுகள் பற்றி சுருக்கமாக ஆசிரியர் விளக்குகின்றார். ஆலயங்களுக்குரிய ஐதீகங்கள், பூஜை வழிபாட்டு மரபுகள், அற்புதங்கள், மருத்துவ குணங்கள் போன்றன மிகச்சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. சோதிடத்தில் நாகவழிபாட்டின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் சோதிடத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. நாகதோஷப் பரிவர்த்தனை, பாவநீக்க முறைகள் தொடர்பாகத் தனது சோதிட அறிவைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். நூலின் இறுதிப் பாகம் நாகதோஷப் பாடல்களாலும் பாம்பாட்டிச் சித்தருடைய பாடல்களாலும் நிரம்பப்பெற்றுள்ளது.