இணுவையூர் மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: இணுவில் சைவத்திரு நெறிக் கழகம், காரைக்கால் வீதி, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founders Street).
xiv, 262 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 24.5×17.5 சமீ.
கலாபூஷணம் மூ.சிவலிங்கம் அவர்களின் 29ஆவது நூல் இதுவாகும். நீண்ட தரிசனவெளியின் சுவடுகளை ஆவணப்படுத்தியுள்ள செயற்பாட்டில் இதுவரை பதிவுசெய்யப்படாத பல தகவல்களை இந்நூலில் ஆசிரியர் தேடிப்பதிவு செய்துள்ளார். இந்திய இயல், இலங்கை இயல், இணுவை இயல் ஆகிய மூன்ற பெரும் பிரிவுகளில் இந்நூல் விரிந்துள்ளது. இந்திய இயலில் சிவபூமி, சித்தர்களின் பரம்பரை, சித்தர்களும் மூலிகை மரங்களும், சித்த மருத்துவமும் சித்தர்களின் பெருமையும் (தேரையர், போகர், சட்டைமுனி, நீர்வளம் சேர்த்த இடைக்காடர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சதுரகிரி வழிபாடும் சித்தர்களும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கம்மாச்சி சுவாமிகள், மேல்மருவத்தூர் பங்காரு அடிகள்-ஆதிபராசக்தி), நோய்தீர்க்கும் மூலிகை மரங்கள், புகழெழு சிவபூமியும் சித்தர்கள் அருளாளர்களும், இந்திய மண்ணில் சிவபூமியின் எழுகோலம் ஆகிய அத்தியாயங்கள் உள்ளன. இலங்கை இயலில், திருத்தம்பலேச்சுரர் திருக்கோயில் (நகுலேச்சரம்), திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், முன்னேச்சரம், தொண்டீச்சரம் (தேவேந்திரமுனை- மாத்தறை மாவட்டம்), சித்தர்களும் ஈழத்துச் சிவபூமி மண்ணில் முருகன் ஆலயங்களின் எழுகோலமும் (கதிர்காமம் முருகன் கோவில், நல்லூர்க் கந்தசுவாமி கோவிலும் சித்தர்கள் கோட்டமும், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்;), ஈழத்து மண்ணில் சித்தர் பரம்பரை (கடையிற் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள், யோக சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், யாழ்ப்பாணத்து ஆறுமுக சுவாமிகள் (மகாகவி பாரதியாரின் ஞானகுரு), நயினை முத்துக்குமார சுவாமிகள், கோண்டாவில் கந்தையா-குடைச் சுவாமிகள்), சிவபூமி மண்ணில் சைவமும் தமிழும் வாழவைத்த ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள், சின்மய மிசன் வதிவிடப் பிரதிநிதி சுவாமி சிதாகாசானந்தா, சிவபூமியின் சக்தியால் கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்ற சான்றோர்கள் (இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, இலக்கிய கலாநிதி பண்டிதமணி மு.கந்தையா, மாவைப் பண்டிதர் கௌரவ கலாநிதி க.சச்சிதானந்தன், கலாநிதி க.வைத்தீஸ்வரக் குருக்கள், சிவதர்ம வள்ளல் கலாநிதி க.கனகராசா, கலாநிதி என்.கே.பத்மநாதன், கலாநிதி கே.எம்.பஞ்சாபிகேசன், செல்வி கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி, சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், இந்திய கலாநிதிப் பட்டம் பெற்ற மோகனதாஸ் சுவாமிகள்), ஈழத்துச் சிவபூமி மண்ணின் எழுகோலம் ஆகிய அத்தியாயங்கள் உள்ளன. இறுதிப் பிரிவான இணுவை இயலில், இணுவில் திருவூரின் சித்தர் பரம்பரையின் முதல்வர் பெரிய சந்நியாசியார், வடிவேற் சுவாமிகள், இணுவில் சச்சிதானந்தம் சுவாமிகள், காரைக்கால் அம்பலவாணர் சுவாமிகள், வேலாயுதர் சந்நியாசியார், ஆறுமுகம் சந்நியாசியார், தியாகராசா சுவாமிகள், சண்முகம் சுவாமிகள், பெரியண்ணா சுவாமிகள், பாவா சுவாமிகள், பிடியரிசித் தொண்டினால் உயர்ந்த சாத்திரம்மா, கப்பனைப் பிள்ளையார் கோயிற் சூழலில் உருவான பெரியார்கள், இணுவில் கந்தசுவாமி கோயிற் சூழலை அன்று உய்வித்த பெரியார்கள், 18ஆம் நூற்றாண்டின் பின் ஆலயங்கள் (காரைக்கால் சிவாலயம், இணுவில் சிவகாமி அம்மன் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில், செகராசசேகரப் பிள்ளையார் கோயில், பரராசசேகரப் பிள்ளையார் கோயில், ஞானலிங்கேச்சுரர் திருத்தலமும் சசிக்குமாரின் பணியும், மஞ்சத்தடி அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் திருக்கோயில், இதர கோயில்கள், தமிழ் மன்னர் காலத்துத் தமிழ்ச் சங்கமும் இம்மண்ணின் முத்தமிழ் வளமும், பல்சுவைக் கலைவளம், சிவபூமியான இணுவை மண்ணின் எழுகோலம், இணுவில் திருவூரின் இன்றைய எழுகோலம், சைவமும் தமிழும் துலங்கும் சைவசித்தாந்த திருமந்திர வகுப்புகள் ஆகிய அத்தியாயங்கள் உள்ளன.