ச.குமாரசுவாமிக் குருக்கள் (மூலம்), ச.பத்மநாதன், கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், நல்லூர்).
x, (4), 79 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-9223-71-8.
இந்நூல் சுப்பிரமணியர் ஆலயங்களில் தினமும் நடைபெறும் ஆறுகாலப் பூசைகளிலும் பின்பற்ற வேண்டிய பூசாவிதிமுறைகளையும் பூஜாபிரயோகங்களையும் சம்ஸ்கிருத கிரந்த லிபியில் கூறும் நூலாகும். இந்நூலின் ஆசிரியர் சிவாகமஞானபானு அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்களாவார். இந்நூலாசிரியர் சிறந்த சைவசித்தாந்த அறிஞரும் சிவாகம கிரியை மரபுகளை நன்கு அறிந்தவருமாவார். ஏட்டுருவில் கிடந்த சிவாகமப் பத்ததி மரபுகளை பதிப்பித்து வெளியிட்ட பெருமைக்குரியவர். தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மிகுந்த பாண்டித்தியமுடையவர். சுப்பிரமணிய ஆலயங்களில் நித்தியபூஜைகளுக்கு ஏற்ப பயனுடைய இந்நூல் 1964இல் பதிப்பிக்கப்பெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில் மீள்பதிப்புக்குள்ளாகின்றது. இதன் மீளச்சு 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் வெளிவந்துள்ளது.