திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்).
(3), iv, 104 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ.
பூவுலகத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன வேதங்கள். சூரிய வழிபாடு பற்றியும் சூரிய வழிபாட்டினால் ஏற்படும் பலாபலன்கள் பற்றியும் விரிவாக அலசுவதே இந்த நூலாகும். இது சூரிய பகவான், சௌரமதம், சூரிய வழிபாட்டுப் பாடல்கள், சூரிய வழிபாட்டுப் பலன்கள், சூரியனார் கோயில், சூரியனின் ஒளி விழும் மூலத் திருத்தலங்கள், புராணங்களில் சூரியன், தைத்திருநாளும் தமிழர் பெருநாளும், சூரிய சந்திர கிரகணங்கள், சூரிய நமஸ்காரம், சித்திரா பௌர்ணமியும் சூரியனும், ஆவணி மாத சூரிய வழிபாடு, சூரியனும் புதுவருடப் பிறப்பும், சோதிடத்தில் சூரியன், சூரியனும் வர்ண சோதிடமும் ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.