ஸ்ரீபிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxvi, 255 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-9233-67-1.
மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தினரின் அனுசரணையுடன் கொழும்பில் நடந்தேறிய நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டின் நினைவாக வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலரின் முதலாவது பிரிவில் வாழ்த்துரைகளும் ஆசியுரைகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவு ‘வரலாறு’ என்ற தலைப்பின் கீழ் முருக வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் (பொ.பூலோகசிங்கம்), தொல்தமிழர் முருக வழிபாடு (நா.இராசசெல்வம்), தமிழகத்தில் முருக வழிபாடு (அம்பிகை வேல்முருகு), விசய நகர நாயக்கர் காலத்தில் முருக வழிபாட்டின் புத்தெழுச்சி (ஸ்ரீபிரசாந்தன்), ஈழநாட்டில் முருக வழிபாடு (ஆ.வேலுப்பிள்ளை) ஆகிய கட்டுரைகளையும், மூன்றாவது பிரிவு ‘சமயம்’ என்ற தலைப்பின் கீழ் முருக மூர்த்தங்கள் (வசந்தா வைத்தியநாதன்), முருகனின் ஆறுமுகம்- தத்துவவியல் நோக்கு (கி.துர்க்காதேவி), முருக விரதங்கள் (பெருமாள் கிரிஜா), சேய்த் தொண்டர்கள்- 63 முருகன் அடியார்கள் (பனையபுரம் அதியமான்) ஆகிய கட்டுரைகளையும், நான்காவது பிரிவு ‘இலக்கியம்’ என்ற தலைப்பின் கீழ் தமிழ் முருகன் (அ.சண்முகதாஸ்), சேயோன் மேய மைவரை உலகு (மனோன்மணி சண்முகதாஸ்), வெற்றிவேல் போர்க் கொற்றவை சிறுவ! (அழ.முத்துப்பழனியப்பன்), தமிழில் முருக பக்தி இலக்கியங்கள் (நவரத்தினம்மா வெள்ளைச்சாமி), பன்னிரு திருமுறைகளில் முருகன் வழிபாடு (வே.லீலாவதி), அருணகிரிநாதர் அருட்பார்வையில் ஆற்றுப்படைத் தலங்கள் (சித்ரா மூர்த்தி), முருக வழிபாடு பாரதி, கவிமணி, பாரதிதாசன் (சி.தில்லைநாதன்), ஆகிய கட்டுரைகளையும், ஐந்தாவது பிரிவு ‘ஆலயம்’ என்ற தலைப்பின் கீழ் ஆறுபடைவீடும் ஆறுமுகனும் (ஜெ.சசிக்குமார்), முருக வழிபாடு: கதிர்காமக் கடவுள் (சேர். பொன்னம்பலம் அருணாசலம்), கதிர்காமம் (குல சபாநாதன்), கயிலாசத்திருந்து கதிர்காமம் வரை: முருக வணக்கத்தின் புனித பூகோளம்(பற்றிக் ஹரிகன்), நல்லூர்க் கந்தசுவாமி கோவில் (சி.பத்மநாதன்), நல்லூரும் தொல்பொருளும் (வி.சிவசாமி), மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் (சு.து.சுந்தரமூர்த்தி ஐயர்), தொண்டைமானாறு செல்வச்சந்நிதி (வல்வை ந.அந்தராஜ்), மண்டூர்முருகன் கோவிலின் வரலாறும் வழிபாட்டு மரபுகளும் (சி.சந்திரசேகரம்), திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம் (வி.துலாஞ்சனன்), பத்துமலைத் திருத்தலம் (வெ.சபாபதி), ஆகிய கட்டுரைகளையும், ஆறாவது பிரிவு ‘திருப்புகழ்’ என்ற தலைப்பின் கீழ் ஈழத்துத் திருப்புகழ்களையும் உள்ளடக்கியதாக இம்மலர் வெளிவந்துள்ளது. மலர்க்குழுவின் உறுப்பினர்களாக தேவகுமாரி ஹரன், ச.முகந்தன், ஏ.அனுசாந்தன், சோ.ஜதீனா, த.அருள்விழி, பெ.கிரிஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.