சாந்தி நாவுக்கரசன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
vi, 146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-955-9233-26-8. (உட்புறத்தில் (Verso) ISBN: 978-955-9233-24-4 என அச்சிடப்பட்டுள்ளது.)
‘வரலாற்றில் வைதிகமும் அவைதிகமும்’ என்ற தலைப்பில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2012இல் ஒழுங்குசெய்திருந்த ஆய்வரங்கினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். இதில் இந்தியத் தத்துவம் (சோ.ந.கந்தசாமி), சங்ககாலச் சமயம் (நா.சுப்பிரமணியன்), இந்திய சமய மரபுகளில் சைவம் (சி.பத்மநாதன்), தொல்பொருட் சின்னங்களும் சைவ சமய வழிபாடும் (சி.பத்மநாதன்), தமிழகத்தில் வைணவ சமயம்: கி.மு. 300-கி.பி. 650 (கு.சேதுராமன்), ஐம்பெரும் காப்பியங்களில் இந்து தர்மம் (இரா.செல்வக் கணபதி), சமணம் (கல்யாணி நாகராஜா), தமிழகத்தில் சமணத்தின் வளர்ச்சி (ஆர்.பார்த்தசாரதி), பௌத்தமதம்- தமிழ்நாட்டு வரலாறு (மயிலை சீனி.வேங்கடசாமி), பௌத்த மதம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு, தமிழிலக்கியத்திலே புத்தர் பெருமை (சி.தில்லைநாதன்), தமிழகத்தில் ஆசீவகர்கள் (ர.விஜயலட்சுமி), தமிழ் நூல்களில் ஆசீவகக் கோட்பாடுகள் (ர.விஜயலட்சுமி), இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் (ஜெயமோகன்) ஆகிய கட்டுரைகள் இச்சிறப்புமலரில் இடம்பெற்றுள்ளன.