13115 விநாயகர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்; 2017. (யாழ்ப்பாணம்: றூபன் பிறின்ரேர்ஸ், ஆனைக்கோட்டை).

96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ. விநாயகப் பெருமானின் தத்துவங்களை அடக்கிய ஒரு பொக்கிஷமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்துக்களுடைய பூர்வ, அபரக் கிரியைகள் அனைத்திலும் முதலிலே விநாயகரை வழிபட்டே ஆரம்பிக்கின்றனர். அவரின் வழிபாட்டு முறைகள், புராணக் கதைகள், சிறப்புகள், பாடல்கள் அனைத்தும் இந்நூலில் தேடித் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விநாயகர் வழிபாடு, விநாயகர் மூலமந்திரங்கள், பன்னிரு திருமுறைகளில் விநாயகர் பாடல்கள், ஒளவையார் அருளிய விநாயகர் பாடல்கள், அகத்திய முனிவர் அருளிய பிள்ளையார் கதை, விநாயகர் கவசம், விநாயகர் காரியசித்திமாலை, விநாயகர் சதுர்த்தி விரதம், விநாயகர் சஷ்டி விரதம், நாகசதுர்த்தி, வெள்ளிக்கிழமை விநாயகர் விரதம், செவ்வாய்ச் சதுர்த்தி, கஜமுகசூர சம்காரம், அறுகின் மகிமையும் ஆனைமுகனும், தோப்புக்கரணம் போடுதல், கேது தோஷம் நீக்கும் விநாயகர், விநாயகர் பஜனைப் பாடல்கள் ஆகிய பதினேழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது

ஏனைய பதிவுகள்

16576 மொக்குள்: பாடல், கவிதைத் தொகுப்பு.

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: செ.அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xx, 80 பக்கம், விலை: ரூபா