திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: சத்தியா பிறின்ரேர்ஸ், மானிப்பாய் வீதி).
48 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20×14 சமீ.
ஸ்ரீஆஞ்சநேயர் வழிபாடு பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்டித்தரும் முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசியுரை, முகவுரைகளுடன், ஆஞ்சநேயர் வரலாறு, ஆஞ்சநேயர் வழிபாட்டு முறைகள், ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஆஞ்சநேயர் வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள், ஆஞ்சநேயரைப் பார்த்த பின் தானியம் உண்ணும் பச்சைக்கிளி, வல்லை ஆஞ்சநேயர் வரலாறு, ஆஞ்சநேயர் பிரார்த்தனை மந்திரங்கள், ஆஞ்சநேயர் சுலோகம், ஆஞ்சநேயர் போற்றி, மாருதி கவசம், ஆஞ்சநேயர் அந்தாதிப் பாடல்கள், ஆஞ்சநேயர் வழிபாட்டுச் சிறப்புகள், சனிபகவான் தோஷம் நீங்க, பஜனைப் பாடல்கள், ஆஞ்சநேயர் கவசம் ஆகிய 17 இயல்களில் இந்நூல் தகவல்களை உள்ளடக்கியுள்ளது.