சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). நயினாதீவு: ஆதீன குரு, நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (கொழும்பு 13: லக்மி அச்சகம், ஆட்டுப்பட்டித் தெரு).
xxii, 226 பக்கம், தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 22×14 சமீ.
அம்பிகையின் ஸ்ரீசக்கரம் அல்லது ஸ்ரீ சக்கர மேருவில் நவாவரண பூஜை செய்வது சிறப்பானதாகும். நவாவரணம் என்பது ஒன்பது சுற்றுக்களை உடையது என்று பொருள்படும். அதில் சிவஸ்சொரூப சங்கிரமம்; நான்கு ஆகும். சக்தி கோணங்கள் ஐந்தாகும். இதன் நடுவிலே இருப்பது பிந்து ஆகும். இதில் அம்பாள் வீற்றிருப்பாள். ‘பிந்து தர்பண சந்துஷ்டா’ என்கிறது லலிதா சகஸ்ரநாம பாஷ்யம். அதாவது பிந்து தர்ப்பணத்தால் சந்தோஷமடைபவள் எனப் பொருள்படும். இந்த ஸ்ரீசக்கரம் பற்றியதான மிகச் சிறந்த நூலாக இது கருதப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33191).