13125 சைவ சமயம்: மேற்பிரிவு-ஒன்பதாம், பத்தாம், பதினொராம் வகுப்புக்கள்.

விவேகானந்த சபை. கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2001. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி).

vii, 291 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக, இலங்கையில் இயங்கும் அறநெறிப் பாடசாலைகளுக்கான இலவச நூல் விநியோகத்திட்டமும் அடங்குகின்றது. இந்நூல் அத்தகைய பிரசுரத் தொடரில் பத்தாவது பிரசுரமாகும். கொழும்பு விவேகானந்த சபையினரால்; முன்னர் 1978இல் வெளியிடப்பெற்றிருந்த இந்நூலை மீள்பதிப்பாக வெளியிட்டு இலவசமாக விநியோகித்துள்ளனர். சைவ சமய வரலாறு, பன்னிரு திருமுறைகள், சைவ சித்தாந்தம், சைவ சாதனைகள், சமயாசாரியர் வரலாறுகள், சந்தனாசாரியர் வரலாறுகள், சமயாசாரியர்;-சந்தனாசாரியர் அட்டவணை, திருக்கோவில் விளக்கம், திருவுருவ வழிபாடு-பொது அறிவு, சைவசித்தாந்த தத்துவம், திருவருட் பயன், திருவருட் பாடல்கள், ஈழத்தில் சைவம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் ஆகிய பாடப் பரப்பினை இந்நூல் விரிவாக விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29041).

ஏனைய பதிவுகள்