சண்முகலிங்கம் சஜீலன். அளவெட்டி: தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயம், அளவெட்டி வடக்கு, 1வது பதிப்பு, 2018. (ஊரெழு: சிறீலக்ஷ்மி பிறின்டர்ஸ், பலாலி வீதி).
48 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
கிராமங்களில் அமைந்துள்ள ஆலயங்களின் வரலாறுகளைத் தேடிப் பதிவுசெய்வதன் மூலம் அவ்வூர் பிரதேச வரலாறு, அப்பிரதேச மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றையும் ஆவணப்படுத்த முடிகின்றது. இத்தகையதொரு அரிய முயற்சி இச்சிறு பிரசுரத்தின் வாயிலாக நடைபெற்றுள்ளது. அவ்வகையில் அளவெட்டி வடக்கில் அமைந்துள்ள தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலய வரலாற்றைக் கர்ண பரம்பரைக் கதைகள் வாயிலாகக் கேட்டறிந்து இங்கு பதிவுசெய்திருக்கிறார்.