இரா.வை.கனகரத்தினம். ஏழாலை: சி.இரத்தினம், இளைப்பாறிய பெருந்தெருக்கள் திணைக்கள மேற்பார்வையாளர், புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்கழி 1986. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்).
xxvii, 48, xlix பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 18×12.5 சமீ.
ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாவது இயலில், ஆலயத்தின் முக்கியத்துவம், ஈழநாட்டிற் சைவம் ஆகிய கட்டுரைகளும், 2ஆவது இயலில் ஏழாலை ஓர் அறிமுகம், ஏழாலை என்ற பெயர் பற்றிய குறிப்பு, ஏழாலை மக்களின் பாரம்பரியம் ஆகிய கட்டுரைகளும், புவனேஸ்வரி அம்பாள் மகத்துவம் என்ற 3ஆவது இயலில், சக்தியின் தோற்றம், சக்தியின் நாமங்கள், தடுத்த லட்சணம், சொரூப லட்சணம், சக்தி பீடங்கள், சைவசித்தாந்தமும் சக்தியும், சிற்ப சாத்திரத்தில் புவனேஸ்வரி வடிவம், சக்தி விரதங்களும் பயனும் ஆகிய கட்டுரைகளும், புவனேஸ்வரி அம்மன் ஆலய வரலாறு என்ற 4ஆவது இயலில் கர்ணபரம்பரைக் கதை, கண்ணகை அம்மனும் ஈழநாடும், ஆலயத் திருப்பணி வரலாறு, பக்தியும் நம்பிக்கையும், ஆலய நிர்வாகம், அம்பாளின் அற்புத நிகழ்ச்சி ஆகிய கட்டுரைகளும், பரிவார தெய்வங்களும் விழாக்களும் என்ற 5ஆவது இயலில் பரிவார தெய்வங்களான விஷ்ணு விநாயகர் ஆகியன பற்றியும், விழாக்கள், விஷேட விழாவும் கலைப்பணியும், இலக்கிய வடிவங்களில் அம்பாள் ஆகிய விடயங்களும் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் 8 பின்னிணைப்புகளில் திருவூஞ்சல், ஐம்மணிமாலை, போற்றித் திருப்பதிகம், அம்பாள் ஆலய தரிசன நெறி, நால்வர் சுவாமிகள் துதிகள், இசையும் இறைவனும், சைவத் திருமுறைகள் ஓதும் நெறி (பஞ்ச புராணம் பாடும் நெறி, சைவதோத்திரங்கள் பாடும் நெறி), தமிழ் மறையோர் பாடிய பண்களும் அவை பாடப்படவேண்டிய பொழுதும், ஆலய விழாக் காலத்திற் பேணப்படவேண்டிய பண், வாத்தியம், நாட்டியம் ஆதியன, சைவத்திருநூல்கள், திருப்பள்ளியெழுச்சி ஆகியனவும் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34573).