நிர்வாக சபையினர். தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், துர்க்காபுரம், 1வது பதிப்பு, 2004. (சுன்னாகம்; திருமகள் அழுத்தகம்).
45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
1948இல் தனி முகாமையிலிருந்து 11 பேர்கொண்ட தர்மகர்த்தா சபையினரிடம் இக்கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 1965இல் உபசபையாக 18 பேர் கொண்ட நிர்வாக சபையைத் தெரிவுசெய்து அவர்களிடம் பரிபாலனப் பொறுப்பினை ஒப்படைத்தனர். இதன் பிரகாரம் அசைவற்ற நிலபுலங்களுக்கு தர்மகர்த்தா சபையும், அசைவுள்ள ஏனையவற்றுக்கு நிர்வாக சபையும் பொறுப்பாக இருந்து இன்றுவரை கருமமாற்றி வருகின்றன. 1968 முதல் மகோற்சவமும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்புற வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபையினரின் 2003ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுக் கணக்கு விபரம் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 780/24632).