13147 நல்லூர் கந்தசுவாமி கோவில்: தோற்றமும் வரலாறும்.

மூ.சிவலிங்கம். கொழும்பு 13: பொன்.விமலேந்திரன், யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

viii, 112 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0210-07-7.

இந்நூலாசிரியர் கிராம சேவையாளராக 01.01.1969 முதல் 31.12.1973 வரை நல்லூர் பிரதேசத்தில் பணியாற்றியவர். தனது 83ஆவது அகவையில் தான் முன்னர் சேகரித்திருந்த தகவல்களின் உதவியுடன் இந்நூலை எழுதியுள்ளார். முருகனின் தோற்றமும் சிறப்புக்களும், முருகனின் பெருமைகளும் விருப்பங்களும், நல்லூர் கந்தசுவாமி கோவில் வரலாற்றுச் சிறப்புகள், தற்போதுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவில், இக்கோயில் அறங்காவலர்களின் நிர்வாகச் சிறப்பின் பொற்காலம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பாரம்பரியமான வளர்ச்சிப்பாதை, நவதள கோபுரங்கள், ஆலயத்தில் நடைபெறும் நித்திய பூசைகளும் விழாக்களும், ஆலயப் பணியாளர்களும் இதர சேவைகளும், ஆலய வளர்ச்சித் தொகுப்பும் திருவிளையாடல்களும் இன்றைய சிறப்புகளும், நல்லூரில் பெருவிழாக்கால நற்பணிகள், நல்லூர் கந்தசுவாமி கோவில் பற்றிய நூல்கள், ஆலயம் மீது பாடிய பாடல்கள் (யாழ்ப்பாணத்து நல்லூர் கொழிப்பு), நல்லூர் முருகன் புகழ்மாலை நல்லைநகரக் கந்தர் பேரிற் பாடிய திருவூஞ்சல், நல்லூர் மண்ணில் நடமாடிச் சிறப்பித்த சித்தர்கள், நல்லூர் கந்தசுவாமி கோவிலை அலங்கரிக்கும் அறப்பணி மையங்கள், ஆலய வீதியை அலங்கரிக்கும் பஜனைகள், காவடிகள் மற்றும் சொற்பொழிவுகள், நல்லைக் குமரன் மலர் ஆகிய 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62078).

ஏனைய பதிவுகள்