சின்னத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை).
(24), 108 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின் 1997ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், Swami Vivekananda’s Address in the World’s Parliament of Religions on 11 September 1893 at Chicago and comments that appeared in the American Press ( A.R.Surendran), The Review of Industrial Artitral Awards – the Creative Role of Appellate Courts (Saleem Marsoof ), Incest among cases of Child Abuse (S.Thurairaja), Industrial Arbitration (V.Vimalarajah), Applicability of Thesawalamai ( S.Selvakkunapalan), Law Student’s Hindu Mahasabha Executive Committee 2002 ஆகிய ஆங்கிலக் கட்டுரைகளும், சைவ மேன் மக்களின் தலைமையகம் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலம் (அ.திருநாவுக்கரசு), திருக்கோணேஸ்வரம் (இ.வடிவேல்), ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வரலாறு, சைவசித்தாந்தத் தத்துவத் தலைக்காவலருடன் ஒரு சில மணித்துளிகள், சட்டமும் சமயமும் (மட்டுவில் ஆ.நடராசா), உன்னை நீயே…. (க.பிரபாகரன்), வேலையாட்கள் சேவை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் (அருளானந்தம் சர்வேஸ்வரன்), நீதித்துறையின் சுதந்திரத்திற்குப் பதினேழாவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் எந்தளவு உதவி புரிகிறது? (கே.ஜீ.ஜோன்), சிவில் வழக்குகளில் கட்டாணையும் இடைக்காலத்தடை உத்தரவும் (ஐ.பயஸ் றெஸ்ஸாக்), இந்து மதமும் விரதங்களும் (அனுறஜி செல்வநாதன்), பிரார்த்தனை (ஜெ.கஜநிதிபாலன்), சிறுவர் துஷ்பிரயோகமும் அதன் விளைவுகளும் (T.சரவணராஜா), சட்ட ஆட்சி சுரடந ழக டுயற (ஜெயசிங்கம் ஜெயரூபன்), வலுவேறாக்கம் (தனபாலசிங்கம் ஜனகன்), வறுமை எமது உடன் பிறப்பு (S.A.M.உபைதுல்லாஹ்), ஓம் சக்தி (ச.ஈசாநந்தினி), இந்து மகாசபையின் சரித்திரத்தில்…. ஆகிய தமிழ்க் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27465).