நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2004. (நல்லூர்: பிள்ளையார் அச்சகம்).
xii, 140 + (48) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 12வது மலராக 2004 நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் ஆன்மீகக் கட்டுரைகள் நிறைந்து காணப்படுகின்றன. நல்லூர்க் கந்தனின் காப்பு உறுதி (நாக.சண்முகநாதபிள்ளை), நல்லூர்க் கந்தனில் நம்புகைப் பதிகம் (சொக்கன்), பிடித்த நின் வேலினால் பெறுவது யாது சொல்? (மு.திருநாவுக்கரசு), நல்லைக் குமரனை நாடுங்கள் நாளும் நற்கதி நமக்கருள்வான் (வ.யோகானந்தசிவம்), ஞானமடி (த.ஜெயசீலன்), தேச நலன் காக்க தேரேறி வரும் நல்லூரான் (காரை.எம்.பி.அருளானந்தன்), தங்கத் தேரில் வருக (மைதிலி சிவநிருபராஜா), விளையாடி வினையோட்ட வா (தாட்சாயணி), மாவிளக்கு ஏற்றுவோம் (மனோன்மணி சண்முகதாஸ்), ஓங்கு பரிபாடலில் உயர்வு பெறும் முருக வழிபாட்டு மரபுகள் (சு.ளு.சந்திரசேகர்), பண்ணும் பதமும் (கு.பாலசண்முகன்), இறைநெறி காட்டும் தாயுமானவர் (செ.பரமநாதன்), சைவசித்தாந்தமே சீரிய நெறி (செ.மதுசூதனன்), திருச்செந்தூர் (பொ.சிவப்பிரகாசம்), குமரகுருபரரின் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்-ஒரு நோக்கு (வி.சிவசாமி), செந்திலாண்டவன் முன் பேசமுடியாத குழந்தை பாடிய அற்புதம் (மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்), நாவுக்கரசர் பதிகத்தில் முருகன் (சந்திரபவானி பரமசாமி), புராணங்கள் கூறும் தத்துவார்த்த உண்மைகள் (சொக்கன்), இலக்கிய ரசனை (குப்பிளான் இ.சிவலிங்கம்), தொண்டர்தம் பெருமை பேசவும் பெரிதே (சிவ.மகாலிங்கம்), விழுப்பம் தரும் ஒழுக்கம் (இ.இரத்தினசிங்கம்), வாழ்வும் சமயமும் (சின்னத்தம்பி பத்மராசா), கடமை வீரனும் மானவீரனும் (சிவ.வை.நித்தியானந்த சர்மா), உற்சவங்களும் அதன் சிறப்புகளும் (மாதினி சபாரத்தின சர்மா), கருங்கல்லில் விக்கிரகங்கள் (நீர்வை மணி), சிவாலய வழிபாட்டு முறை (நடா சம்பந்தமூர்த்தி), சைவசித்தாந்தத்தில் பதி பற்றிய கோட்பாடு (தயாளினி நவநீதகிருஷ்ணன்), நல்லூர் மந்திரிமனை (க.குணராசா), ஆனந்த தாண்டவம் (நயினை சி.சோ.பதந்தன்), நல்லூரில் தேரேறும் ஆறுமுகனின் அருள்நலம் (அனுசூயா அருளானந்தன்), எண்ணத்தில் தூய்மை வேண்டும் (உடுவை சின்னத்தம்பி ஸ்ரீதயாளன்), பக்திப் பிரபந்த இலக்கியங்களில் முருகன் புகழ் (கனகசபாபதி நாகேஸ்வரன்), இந்து மதம் காட்டும் இறைவழிபாடு (மலர் சின்னையா), ஓதியும் உணரமாட்டேன் (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), காட்டும் ஐயா தனிவழி (சு.துரைசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்களை இம்மலரில் காணமுடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33987).