13165 நல்லைக்குமரன் மலர் 2016.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

(8), ix, 174 + (48) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 24ஆவது மலராக 2016 நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நல்லைக் கந்தன் சந்த விருத்தம் (த.ஜெயசீலன்), கருணைக்கடலே நல்லைக் குமரா (மீசாலையூர் கமலா), சொந்தமும் பந்தமும் நீயானாய் (சிவ.சிவநேசன்), இரங்கையனே நல்லையம்பதியானே    (கண. கிருஷ்ணராஜன்), என்றும் துணை நீயே முருகா (கே.ஆர்.திருத்தவராஜா), சொல்லுமொரு மந்திரமும் நீதானையா (கண.எதிர்வீரசிங்கம்),  நல்லை நாயகனின் திருவடியை நான் தொழுதேன் (சின்னையா சிவபாலன்), கழல் தொட்டு நல்லூரா உன்தன் நிழல்பட்டு உய்வேனோ நான் (கை.பேரின்பநாயகம்), தேனும் தினைமாவும் (மனோன்மணி சண்முகதாஸ், அ.சண்முகதாஸ்), வேலுண்டு வினையில்லை (சிவ.மகாலிங்கம்), கவின் பெரு வனப்பு (கந்த.தியாகராசா), அழகன் முருகனின் அற்புத வடிவங்கள் (காரை எம்.பி.அருளானந்தன்), அன்பே இறைவன் (ஸ்ரீபத்மராசா திவ்வியன்), இசை வழிபாட்டின் சிறப்பு (வை.சி.சிவசுப்பிரமணியன்), திருமுறைத் தமிழும் இருமையின் ஒருமையும் (ஸ்ரீ தயாளன்), தீதும் நன்றும் (எந்திரி ச.சர்வராஜா), சிந்தாகுலம் தீர்க்கும் சிவசுப்பிரமணியன் (இராசையா ஸ்ரீதரன்), நினைத்துப் பாருங்கள் (மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா), எமது வாழ்வில் யோகம் (அருள்மொழி சுதர்மன்), சித்தர்களும் வணங்கும் விநாயகன் (முருகேசு ரவீந்திரன்), பக்தி இலக்கிய வரலாற்றில் காரைக்காலம்மையார் (சோபிதா முகுந்தன்), சித்தர் மரபும் சித்தாந்த மார்க்கமும் (கலைவாணி இராமநாதன்), ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் நயினை முத்துக்குமார சுவாமிகள் (மு.சிவலிங்கம்), திருச்செந்தூர் (இரத்தினம் நித்தியானந்தன்), வதரிபீடம் (பொ.சிவப்பிரகாசம்), இந்துப் பண்பாட்டு மரபில் சம்ஸ்கிருத மொழியின் வகிபாகம் (வைத்தியலிங்கம் பாலகிருஷ்ணன்), பக்தி இயக்கத்தில் இலக்கிய வளர்ச்சி (செ.பரமநாதன்), சிவாகம கிரியை முறைகளில் பாலஸ்தாபனம் பற்றிய விளக்கம் (ம.பாலகைலாசநாத சர்மா), ஆதி இலங்கையில் இந்துமத வரலாறு (ஆரணி விஜயகுமார்), ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரும் மணிவாசகரின் திருச்சாழலும் (வ.கோவிந்தபிள்ளை), ஒரு தத்துவமும் இரு தமிழ்ப் பனுவல்களும் (ச.முகுந்தன்), அறிவாராய்ச்சியியல் நோக்கில் சங்கரரின் அத்வைத வேதாந்தம்-ஒரு மெய்யியல் பார்வை (த.தவனிசன்), சைவசித்தாந்த உருவாக்கத்தில் ஞானாமிர்தத்தின் பங்களிப்பு (தி.செல்வமனோகரன்), மனித விழுமியங்களைப் பின்பற்றி நலமாய் வாழ்வோம் (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), இன்றைய இளைய தலைமுறையினரின் சிந்தனைக்கு கந்தரலங்காரத்திலிருந்து சில கருத்துத் துளிகள் (சிவ.வை.நித்தியானந்த சர்மா), மூக்கு குழைம ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைக்கு சுஸ்கருதரின் பங்களிப்பு (புவிலோகசிங்கம் அருள்நேசன்), 2016இல் யாழ் விருதுபெறும் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் (பு.ஆறுமுகதாசன்), வைத்திய கலாநிதி அமரர் இ.தெய்வேந்திரன் (இரா.இரத்தினசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12131 – கருணாகர கானாமுதம் 2014.

கருணாகரப் பிள்ளையார் கோயில். உரும்பிராய்: பரத்தைப்புலம் ஸ்ரீ கருணாகரப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2014. (மலேசியா: விசால் பிரின்ட் சேர்விஸ், கோலாலம்பூர்). 193 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. சரித்திரப்