கே.பொன்னுத்துரை (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுலை 1996. (கண்டி: கிராப்பிக் லாண்ட்).
(88) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×20 சமீ.
24.07.1996 அன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்ற கும்பாபிஷேக வைபவத்தையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. இறை வணக்கம், அம்பிகையின் அருள்பெற்ற அருட்கவிஞர்: அமரர் ஆத்மஜோதி நா.முத்தையா, அருள்புரிவாய் அம்மா (பெ.ஐயனார்), அம்பிகையின் மகிமை (க.சேவற்கொடி), அருள் உலகம் (கிருஷ்ண மீரா), நாவல் நகர் காக்கும் நாயகி (இரா.தங்கவேல்), இளைய உள்ளத்தில் ஆன்மீகம் (பத்மா சோமகாந்தன்), சக்தி தத்துவம் (க.நாகேஸ்வரன்), அருட்கடாட்ச நாயகியின் திருத்தொண்டர்கள் நாம் (பெ.இராமானுஜம்), மலையகத்தின் சக்தித் தலங்களுள் கீர்த்திபெற்ற திருத்தலம் (இ.மகாலட்சுமி), வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்து மதம் (முருகேசு ஸ்ரீவேணுகோபால சர்மா), ஒளி வழிபாடும் பெரியோரும் (ச.ஹேமநாத்), ஆலயமும் ஆத்ம ஜோதியும் (எஸ்.முத்தையாபிள்ளை), வழிவழி மரபு ஆகிய படைப்பாக்கங்களை இச்சிறப்பு மலர் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24683).