அ.ஜெயகுமரன். சுன்னாகம்: வருஷப்புல ஸ்ரீ மகாமாரி அம்பாள் ஆலயம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xxxviii, 257 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
வாழ்த்துச் செய்திகள், ஆசியுரைகளுடன் தொடங்கும் இம்மலரில், சுன்னாகம் வருஷப்புல ஸ்ரீ மகாமாரி அம்பாள் ஆலய வரலாறு, ஸ்ரீ மகாமாரியம்மையின் 4ஆம் மண்டலாபிஷேக மலர் பற்றிய பாமாலை, மாரியம்மன் வழிபாடு (கோப்பாய் சிவம்), சக்தி மந்திரங்கள் (மா.வேதநாதன்), மஹாமேரு யந்திரத்தில் தேவி உபாசனை, அம்பிகை வழிபாட்டின் மகத்துவம் (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), ஆலயங்களில் உள்ள மரங்களும் அவற்றின் சிறப்பும் (வ.உமாசுதக் குருக்கள்), பகவத் கீதையில் காணப்படும் இந்து வாழ்வியலின் அறநெறி விழுமியங்கள் (கலைவாணி இராமநாதன்), சைவாலயங்களும் திருமுறைகளும் (பண்டிதர் பொன்னம்பலவாணர்), அருள்தரும் சக்தி (கணேசசபாபதிக் குருக்கள்), சுன்னாகம் முதல் தமிழ் இராச்சியம் (நா.சர்வேஸ்வரக் குருக்கள்), மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?(ஆ.சபாரத்தினம்), சக்தி வழிபாட்டின் வளர்ச்சி நிலைகள் (சிவ மகாலிங்கம்), வாழ்வு மிகுத்து வரும்-கவிதை (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), வருஷப்புலம் அருள்மிகு ஸ்ரீமகாமாரி அம்பாள் பதிகம் (இராசையா ஸ்ரீதரன்), அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி (வை.கணேசபிள்ளை), அகத்தியர் தேவாரத்திரட்டு (மாதுமை கோணேஸ்வரன்), சக்தியும் சிவமுமாய தன்மை ஒருமையின் இருமை (மு.திருஞானசம்பந்தபிள்ளை), கும்பாபிஷேகம் (திருமதி தர்ப்பணா சுதர்சன்), ஆய கலைகள் அறுபத்துநான்கு (தி.செல்வமனோகரன்), சைவ சமயத்தின் வளர்ச்சியில் மங்கையரின் பங்களிப்பு (ஆறு திருமுருகன்), புனிதவதி-காரைக்காலம்மையார் (கமலாதேவி பொன்னம்பலம்), தாயே மகா சக்தி (அன்னைதாஸன்), அன்னையின் அருள் (திருமதி எஸ்.அருமைநாயகம்), சித்தாந்தம் கூறும் சைவசமயம் (சு.துரைசிங்கம்), ஸ்ரீமாரியம்மன் -சீதளாதேவி (ச.குமாரபாலன்), கும்பாபிஷேகக் கிரியைகளின் மகிமைகளை தெரிந்துகொள்வோம் (இராசையா கருணாகரன்), ஆடிமாதப் பெருமை (கு.சுதாகரன்), அம்மையே (கு.பாலசண்முகன்), கேட்ட வரமெலாம் தந்தருளும் ஸ்ரீ சந்தோஷி மாதா (வ.குமாரசாமிஐயர்), சைவ மக்கள் வாழ்க்கையில் விரதங்கள் (புனிதவதி கருணாகரன்), அன்றும் இன்றும் என்றும் அம்பாள் (க.கருணைநாயகம்), கண்ணகி வழிபாடு (ஆறு திருமுருகன்), வாழவைக்கும் கோவில் திருப்பணிகள் (யாழினி நந்தகுமார்), நான் கண்ட இந்திரவிழா (செ.பாஸ்கரன்), அப்பாவின் டயரியில் இருந்து அன்பு மகள் (ந.கௌரி), எங்கெங்கும் சக்தி மயம் (பொ.புவனேந்திரன்), மகா கும்பாபிஷேக மகிமை (கனக பாலகுமாரக் குருக்கள்), அம்பாள் பெருமை (சுனிதா), வருஷப்புலம் ஸ்ரீமகாமாரி அம்பிகையின் சித்திரத்தேர் (மனமோகன் பிரியங்கன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.