மலர்க் குழு. யாழ்ப்பாணம்: சத்திய சாயி சேவா நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, முத்திரைச் சந்தி, நல்லூர்).
107 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
அன்புதான் அகிலத்தில் உயர்ந்தது என்ற மகத்துவத்தை உரைக்கின்ற பகவான் சத்திய சாயி சேவா நிலையத்தின் பொன்விழா 2017இல் கொண்டாடப்பட்ட வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மலரின் உள்ளே, சத்தியசாயி சேவா நிலையத்தின் வரலாறு, கட்டடங்களின் அபிவிருத்தி, நிலையச் செயற்பாடுகள், இறைவனின் அற்புதங்கள், இறைவனை அடையும் வழி ஆகியவற்றுடன் சுவையான பல தெய்வீக உணர்வூட்டும் ஆக்கங்களும்; இடம்பெற்றுள்ளன. மலர்க் குழுவில் ஆர்.கணேசமூர்த்தி, ஸ்ரீ.வே.கருணாகரன், சி.சிவகோணேசன், ஸ்ரீ.கு.தனேஸ்வரன் ஆகிய நால்வரும் பணியாற்றியுள்ளனர்.