13177 சுங்கத் திணைக்கள இந்து ஊழியர் சங்கம் வெள்ளிவிழா மலர் 1968-1993.

எம்.ஆர். ராஜ்மோகன் (மலர் ஆசிரியர்). கொழும்பு: இந்து ஊழியர் சங்கம், சுங்கத் திணைக்களம், 1வது பதிப்பு, ஜனவரி 1993. (கொழும்பு 13: சிட்டிசன் பிரின்டர்ஸ், 88 ஜிந்துப்பிட்டி வீதி).

(262) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் இந்து ஊழியர் சங்கத்தின் வெள்ளிவிழா 16.01.1993 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்களை பிரதம அதிதியாக அழைப்பித்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்வேளையில் இம்மலர் வெளியிடப்படடிருந்தது. இம்மலரில் சங்க கீதம், ஆசியுரைகள் ஆகியவற்றுடன், களவு போகும் கலாச்சாரம்: (மனுவேல்பிள்ளை ராஜ்குமார் ராஜ்மோகன், கௌரவ பொதுச் செயலாளர் சுங்கத் திணைக்கள இந்து ஊழியர் சங்கம்), 25 Years Of Achievements (K.K.Subramaniam) சுங்கத்தின் பசுமை நினைவுகள் (பொன்.வல்லிபுரம்), 25 ஆம் ஆண்டு (92/93) நிர்வாகக் குழு, Customs Department Hindu Officer’s Association 25th Years (92/93) Executive Committee, வெள்ளி விழா உப குழுக்கள், சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு காணும் சிகாகோ சொற்பொழிவு, மணமகனாக மகாகணபதி, 25 ஆண்டுகட்கு முன் எமது விழா மலரில் பிரசுரிக்கப்பட்ட கவிதை (புலவர் மேல்வையூர் ஆ.பொன்னையா), The need of the Hour (K.Kumarasingham) பூசைகளும் அபிஷேகங்களும் (ம.புவிகரன்), இன்பமே எந்நாளும் துன்பமில்லை (செல்வம் கல்யாணசுந்தரம்), சைவ சமய நெறியில் ஒரு கண்ணோட்டம் (எஸ்.ஆர்.யோகாநந்தன்), அருள் செல்வத்தை தரிசிக்கும் தேடல்கள் (சுப்பையா பாக்கியராஜா), அப்பரின் அருள் விழிப்பு (சோ.சண்முகசுந்தரன்), கொடுத்துத் தேறிய பாரதியார், பஞ்சாங்கம் ஒரு சிறு விளக்கம் (மயில்வாகனம் இராமகிருஷ்ணன்), சனீவரனை சந்தித்த தசரதன் (தெரிந்தபுராணம் தெரியாத கதை’ஞானபூமி’), மனத்தகத்தான் (க.வேலாயுதபிள்ளை), வெள்ளி விழாப் போட்டிகள், அறிவியல் ஆய்வுகளின் பின்னணியில்: இந்து சமயத் தத்துவங்கள் (திருநாவுக்கரசு திவாகரன்), சிவனின் சிரசில் சிவகங்கை (நன்றி: கந்தபுராணம்-அரு.ராமநாதன்), இந்து சமயக் கடவுளர் (மோகனா பேரம்பலம்), ஆன்றோர் சொல் வழி நடப்போமா? (வித்துவான் வேலன்), மக்கள் பணியில் பெறும் மாதவப் பேறு (வ.கணபதிப்பிள்ளை), வாழ்த்துப்பா: சுங்கம் வளர்த்த சங்கம் (சதா.இராமச்சந்திரன்), ஓம் சக்தி (மு.சுந்தரராசா), நடனப் போட்டியில் நளினம் பரதத்தில் கைகள், கடந்து வந்த பாதையில் காலடிச் சுவடுகளாய் (எம்.ஆர்.ராஜ்மோகன்), வெள்ளி விழாப் போட்டி முடிவுகள் (கொழும்பு இந்துப் பாடசாலை மாணவர்), Hinduism From A to Z ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13406).

ஏனைய பதிவுகள்

14071 தென்கிழக்கு இலங்கையின் பண்டைய இந்துசமய வரலாறு.

என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், இல. 91/5, சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xx,

10 Euroletten Prämie ohne Einzahlung

Content Schlusswort ein Fälle Zuverlässiges Schaffen, lizenzierte Spiele, Benutzer-Hilfestellung immerdar Wo kann meinereiner qua diesem 10 Ecu Einzahlungsbonus zum besten geben? Existireren sera ohne Spielbank

16410 அறிவியல் கதைகள்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பளை: சோலைக்குயில் அவைக்காற்றுக் கள வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). vi, 26 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×21.5 சமீ., ISBN: