வ.செல்லையா. வவுனியா: வெள்ளிவிழா மலர்க் குழு, இலங்கை மெய்கண்டார் ஆதீனம், 1வது பதிப்பு, 1997. (வவுனியா: சுதன் அச்சகம்).
35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இலங்கை மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளிவிழா 1997இல் கொண்டாடப்பட்ட வேளை வெளியிடப்பட்ட சிறப்பிதழ். இம்மலரில் சிறப்புப்பாயிரம், நூன்முகம், ஈழத்தில் சைவாதீனங்கள், ஆதீனக்குரு முதல்வரின் நற்சிந்தனை, சைவ ஆதினங்களின் பங்களிப்பு, திருக்கைலாய சந்தானாசிரிய பரம்பரை, தருமபுர ஆதீனத்தின் பங்களிப்பு, தொண்டை மண்டல ஆதீனத்தின் தோற்றமும் வளர்ச்சியும், காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் 229ஆவது குருமகாசந்நிதானம் சிவத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முதற்குருமகா சந்நிதானம் சிவத்திரு ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகள், மெய்கண்டார் ஆதீனத்தின் பணிகள், வவுனியாவில் மெய்கண்டார் ஆதீனம், மெய்கண்டார் ஆதீனப் பணிகளில் இருபத்தைந்து ஆண்டுகள், மெய்கண்டார் ஆதீனத்தின் சேவைகள், மெய்கண்ட தேவநாயனார் அருளிய சிவஞான போதம் ஆகிய 15 தலைப்புக்களின்கீழ் இந்த வெள்ளிவிழா மலரின் ஆக்கங்கள் பதிவாகியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17277/18433).