13182 நாகேஸ்வரி அருளமுதம்: நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக மலர் 2012.

கு.சரவணபவானந்தன், க.பொ.இ.குலசிங்கம். நயினாதீவு: நயினை நாகபூஷணி அம்மன் கோவில் அறங்காவலர் சபை, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379/167, கஸ்தூரியார் வீதி).

x, 412+90  பக்கம், 90 புகைப்படத் தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 27×18.5 சமீ.

நாகபூஷணி அம்மன் வரலாறும் அதன் தொன்மையும், சக்தி பீடங்கள், வழிபாடுகள், மகோற்ஸவம், மஹாயாகம், விக்கிரக வழிபாடுகள், இந்துப் பண்பாட்டு மரபுகள், இசை மரபுகள், ஆய்வுக் கட்டுரைகள், அம்பாளின் திருவூஞ்சல், அடியார் கவிதைகள், ஆங்கிலக் கட்டுரைகள் என ஐந்து பிரிவுகளில் இம்மலர் ஆக்கங்களைக் கொண்டுள்ளது. தமிழ்க் கட்டுரைகளாக கும்பாபிஷேக விளக்கம், ஐயப்பன் வரலாறு, அப்பர் திருமுறை சுட்டும் மணிநாகேச்சரம் நயினையம்பதியே, நாகரிகம் மிக்க நாகர்கள், நயினாதீவுக் கிராமத்தின் சமூக பொருளாதார பண்பாட்டு நிலைமைகளும் அபிவிருத்தி உபாயங்களும், தமிழர் பண்பாடு: இருப்பும் சவால்களும், குன்றக்குடி அடிகளார் வாழ்வும் பணியும், அப்பர் பதிகங்கள் தரும் சில வரலாற்றுக் குறிப்புகள், சைவசித்தாந்தத் திறன், ஏகன் அநேகன் இறைவன், சீரிய மனித வாழ்விற்கு சமயம் காட்டும் பண்பாட்டு நெறிமுறைகள், அபிராமி அந்தாதி: ஓர் ஆய்வுநோக்கு, அமுதசுரபி, வள்ளலாரின் தத்துவ தளம், உரைசால் பத்தினி, கந்தபுராணமும் சைவசித்தாந்தமும், நயினை நல்லூர் திருத்தலப் பஜனை பாத யாத்திரை, சிற்பக் கலை, சிற்பக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும், பெரிது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டிருந்த தமிழ்க் கட்டுரைகள் இம்மலரில் வெளியாகியுள்ளன. ஆங்கிலக் கட்டுரைகளாக  Many Faces of Mother Goddess, Symbolism, The Continnum-from the past into the present Nagapooshani Ammal இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Maria casino Norge’s beste avslag

Content Maria Casino Kundeservice Finn det beste norske casino inne i døgn! Hva er de vanligste bingo spillene? Vanliga Frågor Och Jo Alene Maria Casino